நாசாவிற்கு ஐடியா குடுத்தா ரூ. 4 கோடி!!!

  jerome   | Last Modified : 10 Apr, 2017 05:59 pm

விண்வெளி ஆய்வில் நாளுக்கு நாள் தேடல்களும் அதை நோக்கிய ஆராய்ச்சிகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. உலக நாடுகள் அனைத்தும் அதற்காக செலவிடும் தொகையும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. அந்த வரிசையில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தன்னுடைய அடுத்தகட்ட முயற்சியை முன் வைத்துள்ளது. ஹாலிவுட் படங்களிலும், ஆங்கில நாவல்களிலும் விண்வெளி பயணத்தைப் பற்றி வரும் கற்பனை ஐடியாக்களை போல பிற ஐடியாக்களை செயல்படுத்தி பார்க்க நிதி ஒதுக்கியுள்ளது. அதன்படி இந்த ஆண்டு 22 ஐடியாக்களுக்கு செயல்வடிவம் கொடுக்க ரூ.4 கோடி ஒதுக்கி உள்ளது. இந்த நிதியானது Nasa Innovative Advanced Concepts programme (NIAC) திட்டத்தின் கீழ் இரண்டு கட்டமாக வழங்கப்பட உள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் ஐடியாவை செயல்படுத்த முடியுமா என்று எழுத்தளவில் விளக்கம் அளிக்க 9 மாத கால அளவும் ரூ.80 லட்சமும் வழங்கப்படும். இதில் தேர்வானபின் அந்த ஐடியாவை செயல்படுத்தி நிரூபிக்க 1 வருட காலமும் ரூ. 3.2 கோடியும் கொடுக்கப்படும். இதில் செயற்கை ஈர்ப்பு விசை உருவாக்கம் மற்றும் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழக்கூடிய சாத்தியம் போன்றவற்றை அடிப்படையாக கொண்ட ஐடியாக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட உள்ளதாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close