கழிவு நீரில் கண்டுபிடிக்கப்பட்ட ராட்சத வைரஸ்

  jerome   | Last Modified : 10 Apr, 2017 08:23 pm
ஆஸ்திரியாவில் குளோஸ்டர்ன்பர்க் நகரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து, அளவில் பெரிதான மற்றும் புதிதான வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்த வைரஸிற்கு விஞ்ஞானிகள் குளோஸினு வைரஸ் என்று பெயரிட்டுள்ளனர். இந்த வைரஸ் கடந்த 2003 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட, மிமி வைரஸை காட்டிலும் பெரிதாக இருக்கின்றதாம். மேலும், இந்த வைரஸ் பழங்காலத்தில் புதைந்து போயிருந்த செல்களில் இருந்து உருவாகியிருக்கலாம் அல்லது வைரஸ்களின் பரிணாம வளர்ச்சியின் காரணமாக அளவில் பெரிதாகி இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் யூகிக்கின்றனர். குளோஸினு வைரஸால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லையென்றும் இதுவும் சாதாரண ஒரு செல் உயிர் போல தான் என்றும் விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close