25 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த "முதலை-டைனோசர்கள்"

  jerome   | Last Modified : 10 Apr, 2017 07:19 pm
நம் பூமியில் மனிதன் தோன்றுவதற்கு முன்பே வாழ்ந்த டைனோசர்கள், எப்போது தோன்றியது என்பதை அறிய தொடர் ஆய்வுகள் நடந்து வருகின்றன. அதற்கு விடை கிடைக்கும் விதமாக இப்போது 'பைடோசர்கள்' வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இதுவரை கண்டெடுக்கப்பட்ட டைனோசர்களின் படிமங்களை ஆய்வு செய்ததில் அவைகள் வாழ்ந்த காலங்கள் 6 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது என்றே கணிக்கப்பட்டது. ஆனால், விர்ஜினியா மியூசிய ஆய்வாளர்கள் நடத்திய தொடர் ஆராய்ச்சியில் முதலைகளைப் போல உருவம் கொண்டு, நீரில் வாழ்ந்த 'பைடோசர்கள்' எனப்படும் டைனோசர்கள் சுமார் 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாழ்ந்து வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த பைடோசர்கள் தட்டையான மூக்கும், முதலை போன்ற உடலமைப்பும் கொண்டது. பைடோசர்கள் இன்றைய சீனா இருக்கும் நிலப்பரப்புகளில் வாழ்ந்ததாகவும், இவைகளை பற்றி நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவுகள் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி விர்ஜினியா மியூசியத்தின் மூலம் வெளியிடப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close