ஆழ்கடல் வழியே பூமியை துளையிடும் ஜப்பானிய விஞ்ஞானிகள்

  jerome   | Last Modified : 10 Apr, 2017 05:57 pm
ஜப்பான் மரைன்-எர்த் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி (JAMSTEC) ல் பணிபுரியும் விஞ்ஞானிகள், வரலாற்றிலேயே முதன்முறையாக பூமியின் உட்கரு பகுதியின் மேலடுக்கை (MANTLE) துளையிட உள்ளனர். இதற்காக மூன்று ஆழ்கடல் பகுதியை தேர்வு செய்துள்ளனர். முதலாவதாக ஹவாய் தீவு அமைந்துள்ள கடல் பகுதி, இரண்டாவதாக கோஸ்ட்டா ரிக்கா. இவை இரண்டும் சரி இல்லையென்றால் மெக்சிகோ கடல் பகுதியில் ஆய்வு நடத்த உள்ளனர். இந்த ஆய்வை ஜப்பானின் ஆழ்கடலை துளையிடும் கப்பலான Chikyu வின் உதவியால் நிகழ்த்த உள்ளனர். Chikyu ஆழ்கடலில் 4 கி.மீ ஆழத்தில் பயணம் செய்து அதன்பின் 6 கி.மீ ஆழத்திற்கு உள்ள மேல் ஓட்டினை துளையிட்டு MANTLE -ஐ ஆய்வு செய்ய உள்ளது. இந்த ஆய்வின் செலவிற்கான பாதி தொகையை ஜப்பான் அரசு கொடுத்து விட்டது. இதுகுறித்து JAMSTEC விஞ்ஞானி நாட்சு ஏபி கூறுகையில் "மேலடுக்கு பகுதி (MANTLE) எதனால் உருவாக்கப்பட்டு உள்ளது என தெரியவில்லை. பசுமஞ்சள் நிறத்தில் காணப்படும் இதனை துளையிடுவதன் மூலம் நிலத்தட்டுக்களின் தன்மையை தெரிந்து கொள்வதோடு, பூகம்பம் குறித்த கேள்விகளுக்கும் விடை அறிய முடியும்" என நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close