சோயுஸ் காப்ஸ்யூலில் பூமிக்குத் திரும்பிய விண்வெளி வீரர்கள்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
கடந்த அக்டோபர் மாதம் நாசா, விண்வெளியில் தங்கி ஆராய்ச்சி செய்ய நாசா வானியல் விஞ்ஞானி ஷேன் கிம்ப்ரோ, ரஷ்யாவைச் சேர்ந்த காஸ்மாலஜி விஞ்ஞானிகள் செர்கிரைகோவ் மற்றும் ஆண்ட்ரே ஆகியோரை விண்வெளிக்கு அனுப்பியது. 173 நாட்கள் ஆய்வு முடிந்து இந்த மூவரும் தற்போது பூமிக்கு திரும்பியுள்ளனர். தரையிறங்க திட்டமிட்டபடி சரியாக கஜகஸ்தானை வந்தடைந்து உள்ளனர். இவர்கள் சோயுஸ் காப்ஸ்யூல் பாராசூட் உதவியால் பத்திரமாக பூமியை வந்தடைந்ததை நாசா டி.வி நேரடி ஒளிபரப்பு செய்துள்ளது. இதில் கிம்ப்ரோ சமீபத்தில் நடந்த ஸ்பேஸ் வாக்கில் இரண்டு முறை பங்கேற்றார் என்பது குறிப்பிடதக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close