மின்கம்பங்களின் மேல் இருக்கும் இந்த பந்து எதற்கு?

Last Modified : 01 Jan, 1970 05:30 am

நாம வெளியில் செல்லும் போது பார்த்து வியக்க கூடிய விஷயங்களில் ஒன்று உயரமான மின்கம்பங்கள். அப்படி வியக்கும் சமயங்களில் அடி மனதில் எழும் கேள்வி 'அது என்ன மின்கம்பிகளில் (transformer wire) ஆரஞ்சு கலர் பந்து? அதை யார் அங்கே வைத்தார்கள்? ஏன்?'. முக்கியமில்லாத இந்த விஷயம் மூளையை குழப்பறது எனக்கு பிடிக்கலை, அதனால்... ஆரஞ்சு கலரில் இருக்கும் இந்த பந்துக்கு 'ஏரியல் மார்க்கர் பால்ஸ்' (aerial marker balls) என்று பெயர். பொதுவாக விமானங்கள் வான் நோக்கி உயரத்தில் தான் பறக்கும். ஆனால் ராணுவத்தில் பயன்படுத்தும் விமானங்கள் பயிற்சியின்போது குறிப்பிட்ட உயரத்திலே பறக்கும், மேலும் லேண்டிங் மற்றும் டேக் ஆஃப் செய்யும் போதும் அவை தாழ் நிலையிலேயே பறக்கும். அவ்வாறு பறக்கும் சமயங்களில் மெல்லிய மின்கம்பிகள் கண்களுக்கு புலப்படாமல் விபத்து ஏற்படும் அபாயம் உண்டு. இதனை தடுக்கத்தான் இந்த பந்துக்களை மின்கம்பங்களில் இணைத்துள்ளனர். விஷயம் இவ்வளவுதான்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.