இந்திய போதை மார்க்கெட்டை குறி வைக்கும் "பாப்பர்ஸ்"

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
உலகளவில் நடக்கும் கறுப்பு சந்தையில் போதை பொருட்களுக்கு தனி முக்கியத்துவம் உண்டு. கஞ்சா, கொக்கைன் இந்த வரிசையில் அடுத்து இடம் பிடித்துள்ளது பாப்பர்ஸ். இங்க் ரிமூவர், ஒயிட்னர் போன்றவற்றை சிறு துணியில் ஊற்றி மூக்கினால் உறிஞ்சினால் அதில் உள்ள வேதிப்பொருள் போதையை தரும். இந்த போதைக்கு பள்ளி மாணவர்கள் உட்பட பலரும் அடிமையாகி வருவதாகவும் அதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் சில வருடங்களுக்கு முன் நம் தமிழகத்திலேயே சமூக ஆர்வலர்கள் சிலர் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், அதற்கடுத்த நடவடிக்கை என்ன ஆனது என்று தெரியவில்லை. இப்போது அந்த போதை பொருள் 'பாப்பர்ஸ்' என்ற புதிய ரூபத்தில் 'மெட்ரோ பார்ட்டி' களில் வலம் வரத்தொடங்கி உள்ளது. இதில் உள்ள ஐசோ புரொப்பைல் நைட்ரைட், ஐசோ பியூட்டைல் நைட்ரைட் போன்றவை உடலுக்கு அதிகம் தீங்கு விளைவிக்க கூடியவை. சமீபத்தில் ஐரோப்பிய மருத்துவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் 'பாப்பர்ஸ்' பயன்பாட்டால் கடந்த 2016 வரை 12 பேருக்கு பார்வைக் குறைபாடு ஏற்பட்டு உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. மும்பை, டெல்லி, புனே, கோவா ஆகிய நகரங்களில், பாப்பர்ஸ் - ஆன்லைன் விற்பனையில் கல்லா கட்டுகின்றதாம்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close