உலகின் முதல் "பஸ்-பைக்"

  jerome   | Last Modified : 11 Apr, 2017 04:09 pm

ஒரே நேரத்தில் 12 பேர் பயணிக்கக் கூடிய பஸ் வடிவ பைக்கினை கனடாவைச் சேர்ந்த பிங் சியோ லியூ என்ற ஆட்டோ மொபைல் விஞ்ஞானி வடிவமைக்க உள்ளார். 'சிரோகோ' என்று பெயரிடப்பட்டு உள்ள இந்த அதி நவீன பஸ்-பைக் ஒரே வரிசையில் 6 சக்கரங்களை உடையது. மேலும், இதில் பயன்படுத்தப்பட உள்ள கைரோஸ்கோப் என்ற தொழில்நுட்பம் இந்த பைக் வளைவுகளில் செல்லும்போது ஒரே சீராக செல்லவும், மற்ற வாகனங்களை விட வேகமாக செல்லவும் உதவுகின்றது. சிராகோவின் இயக்கம் பாதி-தானியங்கி முறையில் இயங்கும்படி அமைக்க உள்ளதாகவும், இதை உருவாக்கும் பணிகள் ஆரம்பகட்டத்தில் இருப்பதாகவும் லியூ தெரிவித்து உள்ளார். இதனுள் இருக்கும் இன்டெர்னல் பேட்டரி மோட்டாருடன் இணைக்கப்பட்டு இருப்பதால் இதன் மைய ஈர்ப்பு விசை சீராக இருந்து வாகனம் சாய்ந்து விடாமல் இருக்கச் செய்யுமாம்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close