புதிய கண்டுபிடிப்புகளை அறிவிக்க காத்திருக்கும் நாசா

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள புதிய ரகசியங்கள் பற்றிய தகவல்களை, நாளை (வியாழன்) 'டெலி கான்ஃபரன்ஸ்' முறையில் வெளியிட நாசா திட்டமிட்டு உள்ளது. இந்த கண்டுபிடிப்புகள் அனைத்தும் கேஸினி ஸ்பேஸ் கிராஃப்ட் மற்றும் ஹப்பிள் தொலைநோக்கி மூலம் கண்டறியப் பட்டவை. நாசா தலைமையகத்தில் இருந்து நேரடியாக நடக்க இருக்கும் டெலி கான்ஃபரன்ஸில் நாசா தலைமை இயக்குனர் ஜிம் கிரீன் மற்றும் மூத்த அறிவியலாளர் மேரி வோய்டெக், கேஸினி திட்ட ஆய்வாளர் லிண்டா ஸ்பில்கெர் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். இதில் பொதுமக்களின் கேள்விக்கும் பதிலளிக்க உள்ளனர். #AskNASA என்ற ஹேஷ்டேக்கினை கொண்டு நம் கேள்விகளை கேட்கலாம். மதியம் 2 மணிக்கு நேரடி ஒளிபரப்பாக நடக்க இருக்கும் இந்த கான்ஃபரன்ஸை மேலே உள்ள லிங்க்கின் மூலம் பார்க்கலாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close