போதையிலிருந்து தப்பிக்க உதவும் போதைப்பொருள்..!!!

  jerome   | Last Modified : 12 Apr, 2017 09:21 pm
19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் குடி போதையில் சிக்கி தவிப்பவர்களை மீட்பதற்காக அமெரிக்க மருத்துவர்கள் பலர் 'மார்ஃபைன்' என்ற போதைப்பொருளை மருந்தாக பயன்படுத்தி வந்தனர். பின் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இதற்கு மாற்றாக ஹெராயின் பயன்படுத்தப்பட்டு வந்தது. முதலில் வலி நிவாரணியாகவும், இருமல் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வந்த ஹெராயின் பின்னாளில் 'Non-Addictive' எனும் மருந்துகளின் வகையில் இணைந்தது. ஆனால், இதை மருந்தாக உட்கொண்ட பலர் அதற்கு அடிமையாகும் நிலை ஏற்பட்டுள்ளதால் இப்போது அதற்கும் மாற்றாக கஞ்சா வந்துள்ளது. அமெரிக்கா போன்ற சில நாடுகளில் கஞ்சாவை ஒரு மருந்துப் பொருளாக பயன்படுத்தி வருவது அனைவரும் அறிந்ததே. தற்போது கஞ்சாவில் இருந்து பிரித்து எடுக்கப்படும் மூலப்பொருட்களை மருந்தாக மாற்றுவதன் மூலம் ஆல்கஹால், ஹெராயின், புகையிலை போன்ற பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்க முடியுமென நவீன அறுவை சிகிச்சை பயிற்சி நிறுவனர் வில்லியம் ஹால்ஸ்டெட் கூறி உள்ளார். மேலும், கஞ்சாவைக் கொண்டு உருவாக்கப்பட்ட, அந்நாட்டு அரசின் அனுமதிபெற்ற மருந்துப்பொருட்கள், மருத்துவர்களால் பரிந்துரைக்கப் படுகின்றது என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close