வடக்கு கரோலினா, டியூக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் நம் வீடுகளில் பயன்படுத்தும் சோஃபாக்கள் மற்றும் மெத்தைகளின் மூலம் புற்றுநோய் மற்றும் தைராய்டு பாதிப்புகள் உண்டாகிறதென தெரிய வந்துள்ளது.
இவைகளில் எளிதில் தீப்பற்றி விடாமல் இருக்க அவற்றை தயாரிக்கும் போது decaBDE (decabromodiphenyl ether) என்ற தீ தடுப்பு வேதிப்பொருள் சேர்க்கப்படுகின்றதாம். இந்த வேதிப்பொருள் கண்ணுக்குத் தெரியாத தூசிகள் போல பரவி நம் கைகள், உணவுகள் போன்றவற்றில் கலப்பதால் தைராய்டு மற்றும் புற்றுநோய் உண்டாகின்றதாம்.
இந்த பாதிப்புகள் நிகழ 74% அளவிற்கு வாய்ப்புகள் உள்ளதென மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, குழந்தைகளை இது அதிகம் பாதிக்கும் என தெரிவித்து உள்ளனர்.