கடலில் கலக்கும் எண்ணெயை அகற்ற புதிய நுட்பம்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சென்னை துறைமுகத்தில் சரக்கு கப்பல்கள் மோதிக்கொண்டதில், கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் கடல் நீரில் கலந்து சுற்றுப்புறத்தை பாதித்த விஷயம் அனைவரும் அறிந்ததே. இந்த ஒரு சம்பவம் மட்டுமின்றி உலகெங்கும் இந்த மாதிரியான கப்பல் விபத்துகள் நடந்துகொண்டே தான் இருக்கின்றன. இது தவிர, கசிவின் காரணமாகவும் கச்சா எண்ணெய் கடலில் கலப்பதால் கடல் வாழ் உயிரினங்கள் அதிக பாதிப்பிற்கு உள்ளாகின்றன. இதற்காகவே, நீரிலிருந்து எண்ணெயைப் பிரித்து எடுக்கும் புதிய வகை பஞ்சு ஒன்றை சிகாகோவைச் சேர்ந்த சேத் டார்லிங் என்ற ஆராய்ச்சியாளர் உருவாக்கி உள்ளார். பாலியூரித்தேன் மற்றும் சிலேன் கொண்டு உருவாக்கப்பட்டு உள்ள இந்த பஞ்சு தன் எடையை விட 90 மடங்கு எண்ணெயை உறிஞ்ச வல்லது. அதோடு, இதனை பல தடவைகள் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதை வைத்து பெரிய அளவில் எண்ணெய் கழிவுகளை அகற்ற முடியுமா என்று தெரிந்துகொள்ள அடுத்தகட்ட ஆய்வுகள் நடக்கவிருப்பதாக சேத் தெரிவித்து உள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close