வேற்றுகிரக வாசிகளுக்கு நாம் அனுப்பிய தகவல்....

  shriram   | Last Modified : 13 Apr, 2017 06:59 pm

நாசா விஞ்ஞானிகள், 1977ஆம் ஆண்டு வோயேஜர் 1 மற்றும் 2 (Voyager) என இரண்டு செயற்கை கோள்களை விண்ணில் அனுப்பினர். உலகில் இருந்து மிகவும் தொலைவில் இருக்கும், மனிதன் உருவாக்கிய பொருட்கள் இவைதான். பல கிரகங்களை படம்பிடித்து நமக்கு அனுப்பிய பெருமையோடு, சிலவருடங்களுக்கு முன், நம் சூரிய குடும்பத்தின் எல்லையை கடந்த பெருமையும் இவைகளை சேரும். டெர்மினேஷன் ஷாக் எனப்படும் அந்த பகுதியை கடந்து வோயேஜர் 1 வெளிவட்டத்தில் பயணித்து கொண்டிருக்கிறது. இந்த செயற்கைக்கோளை, விண்ணில் வேற்றுக்கிரக வாசிகள் யாராவது கண்டுபிடித்தால், அவர்கள் பூமியை பற்றியும், மனித இனத்தை பற்றியும் தெரிந்து கொள்ள பல தகவல்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளது. 55 உலக மொழிகளில் அவர்களுக்கு 'வணக்கம்' சொல்லும் செய்திகளோடு, நம் உலகை பற்றிய பல புகைப்படங்களும் உள்ளன. மேலும், அந்த காலத்தின் மிகப்பிரபலமான இசைக்கலைஞர்களின் பாடல்களும் அதில் உள்ளதாம். அவர்கள் இறந்துவிட்டாலும், அவர்களின் கலை, உலகின் எல்லைகள் தாண்டி தற்போது விண்ணின் எல்லையை தேடி சென்று கொண்டிருக்கிறது!

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.