கோடை கால மின்வெட்டை தடுக்க புதிய தொழில்நுட்பம்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

தெற்கு கலிஃபோர்னியாவைச் சேர்ந்த மின்பொருள் தயாரிப்பு நிறுவனம் ஒன்று, கலப்பின முறையில் உருவாக்கப்பட்ட பேட்டரிகள் மற்றும் கேஸ் டர்பைன் கொண்டு மின்சாரத்தை தயாரிக்கவும், சேமிக்கவும் கூடிய புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளது. இந்த முறை, மின்சார தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் உதவியாக இருக்குமென்று அந்நிறுவனம் கூறி உள்ளது. உலகில் முதன்முறையாக கலிஃபோர்னியாவில் தான் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தபட உள்ளது. வரும் 2030-ற்குள் 50% அளவிற்கு மாசு இல்லாத மின்சாரம் தயாரிப்பதில் தன்னிறைவு அடைய அந்நாட்டு அரசாங்கம் முடிவெடுத்து உள்ளது. பகலில் சூரிய ஒளி மூலமும், இரவில் கேஸ் டர்பனை கொண்டும் மின்சாரம் தயாரித்துக் கொள்ள முடியும் என்று இதை வடிவமைத்த நிக்கோல்ஸ் என்பவர் கூறி உள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close