சூரியனிலிருந்து சில ஒளி ஆண்டுகள் தூரத்தில் 'சூப்பர் பூமி'

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ஹார்வர்ட் வானியல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் சூரியனில் இருந்து 39 ஒளி ஆண்டுகள் தூரத்தில் பூமியை போன்ற சுற்றுவட்ட பாதை கொண்ட புதிய கோளை கண்டறிந்து உள்ளனர். முழுவதும் பாறைகளால் சூழப்பட்டு இருக்கும் இந்த கோளிற்கு LHS 1140b என்று பெயர் வைத்து உள்ளனர். பூமியை விட 6.6 மடங்கு நிறை அதிகமாக காணப்படும் இந்த கோளில் மனிதர்கள் வசிக்க முடியுமா என்ற ஆய்வுகள் நடத்தப்பட உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். LHS 1140b - கோளில் எந்த மாதிரியான வாயுக்கள் அடங்கியுள்ளன என்பதை அறிய Transmission Spectroscopy என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளனர். அந்த கோளில் இருந்து வரும் பிரதிபலிப்பு ஒளிக்கற்றைகளை ஆராயும் போது அவைகளில் இருக்கும் வாயுக்களின் மூலக்கூறுகள் தெரிய வரும், இதை Transmission Spectroscopy மூலம் தான் அறிந்து கொள்ள முடியும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close