சூப்பர் நோவாக்களின் ரகசியத்தை உடைக்குமா கிராவிட்டி லென்ஸ்..??

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
விண்வெளியில் நம் சூரிய குடும்பத்தைத் தாண்டி எண்ணற்ற நட்சத்திரங்களும் அவற்றை சுற்றி கோள்களும் இருந்து வருவதாக சமீபத்திய கண்டுபிடிப்புகள் உறுதி படுத்தின. இந்த நட்சத்திர கூட்டங்களில் நிகழும் சூப்பர் நோவா வெடிப்புகளை மட்டும் அவ்வளவு எளிதாக அறிய முடியவில்லை. எனவே, இதற்கென திட்டமிட்டு உருவாக்கப்பட்டது தான் கிராவிட்டி லென்ஸ். ஐன்ஸ்டீனின் ரிலேட்டிவிட்டி விதிகளை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த லென்ஸின் மூலம் தற்போது iPTF16geu என்ற சூப்பர் நோவா வெடிப்பினை முழுவதுமாக புகைப்படம் எடுக்க முடிந்துள்ளது. பூமியிலிருந்து 2 பில்லியன் ஒளி ஆண்டுகள் தூரத்தில் நிகழ்ந்த இந்த வெடிப்பினை ஸ்டாக்ஹோல்ம் பல்கலைக்கழக ஆய்வாளர் ஏரில் கூபர் படம் பிடித்ததில், இதிலிருந்து வரும் ஒளி ஒரே சீராக பரவுவது தெரிய வந்துள்ளது. கிராவிட்டி லென்ஸின் மூலம் 50 மடங்கு பெரிதாக்கி பார்க்க முடியும் என்பதால் சூப்பர் நோவாக்களை பற்றி இன்னும் பல அரிய விஷயங்கள் வெளிவர வாய்ப்புள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close