ஆபரேஷனுக்குப் பின் ஆபத்தை தடுக்க 'பாக்டீரியா ஃப்ரீ' உபகரணங்கள்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
மருத்துவத் துறையில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மிக நுண்ணிய மற்றும் உயர்தர உலோகங்களால் உருவாக்கப்பட்டு இருக்கும் உபகரணங்களில் கூட பாக்டீரியா தொற்று ஏற்படுவதாகவும், இதனால் அறுவை சிகிச்சைக்குப் பின் நோயாளிக்கு பாதிப்பு உண்டாக அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் டாக்டர். ஜோன் ஜியோகெகன் தெரிவித்து உள்ளார். இவ்வாறு ஏற்படும் பாக்டீரியா தொற்றின் மூலம் நம் இரத்த திசுக்களில் "Klebsiella pneumonia" "Staphylococcal" போன்ற பாதிப்புகள் உண்டாகின்றதாம். இந்த பாக்டீரியாக்கள் ஒன்றாக இணைந்து "staphylococci" என்ற புரதத்தை உருவாக்கி அதன் மூலம் தங்களை இனப்பெருக்கம் செய்து கொள்ளும் தன்மை உடையது எனவும், இவற்றை தடுக்க 'பாக்டீரியா ஃப்ரீ' உபகரணங்களை உருவாக்குவது அவசியம் எனவும் ஜோன் கூறியுள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close