எரிமலைகளை கண்காணிக்க புதிய திட்டம்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
சில வாரங்களுக்கு முன் இத்தாலியில் உள்ள எட்னா எரிமலை பகுதிக்கு ஆய்வு படப்பிடிப்பிற்கு சென்ற பிபிசி செய்தியாளர்கள் குழு அதன் திடீர் வெடிப்பில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இதையடுத்து, எரிமலைகளின் வெடிப்பை முன்கூட்டியே தெரிந்துகொள்வது தொடர்பான ஆய்வு முயற்சிகளை பிரிட்டனின் லீட்ஸ் பல்கலைக்கழக எரிமலை நிபுணர்கள் மேற்கொண்டுள்ளனர். செயற்கை கோள்களை பயன்படுத்தி உலகில் இருக்கும் 1500 எரிமலைகளையும் 24 மணி நேரமும் கண்காணிக்க திட்டமிட்டு உள்ளனர். இதன்மூலம், இதுவரை கண்காணிக்கப்படாமல் இருக்கும் பிற நாட்டு எரிமலைகளின் தன்மையை தெரிந்துகொள்வதோடு, அந்த பகுதிகளில் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close