வெள்ளி செல்கிறது இஸ்ரோ; ஆராய்ச்சி செய்கிறீர்களா??

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ, தனது அடுத்த மெகா திட்டமாக வெள்ளி கிரகத்துக்கு செயற்கைக்கோளை அனுப்ப உள்ளது. இந்த செயற்கைகோள் மூலம் வெள்ளி கிரகத்தை ஆராய்ச்சி செய்ய ஆர்வலர்களை அழைத்துள்ளது. வெள்ளியை ஆராய்ச்சி செய்ய, விண்வெளி ஆய்வு கருவிகளை உருவாக்க ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என இஸ்ரோ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. செவ்வாய் திட்டத்தை போல, இந்த செயற்கைக்கோளும் வெள்ளியை சுற்றிவரும் ஆர்பிட்டர் ரக திட்டமாக இருக்கும். இந்த செயற்கைக்கோள் செலுத்த குறைந்தபட்சம் 2020ஆம் ஆண்டாவது ஆகுமாம். வெள்ளி கிரகத்தின் பல பண்புகள் பூமியை போலவே இருப்பதால் அதை பூமியின் இரட்டை என அழைப்பார்கள். 1960ஆம் ஆண்டு முதல் பல செயற்கைக்கோள்கள் வெள்ளியை ஆராய்ச்சி செய்திருந்தாலும், இன்னும் பல விஷயங்கள் அந்த கிரகத்தை பற்றி தெரியவில்லை என்கிறது இஸ்ரோ. "செவ்வாய்க்கு இரண்டாவது செயற்கைக்கோளை அனுப்பும் திட்டமும், வெள்ளி திட்டத்தையும் தற்போது ஆய்வு செய்து வருகிறோம். திட்டங்கள் முழுதானபின், அதற்கான அனுமதி பெறப்பட்டு, துவங்கப்படும். நிச்சயம் இரண்டும் நடைமுறைக்கு வரும்," என இஸ்ரோ தலைவர் கிரண் குமார் கூறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close