மலட்டுத்தன்மையை உண்டாக்கும் குளிர்பானங்கள்

Last Modified : 08 May, 2017 09:50 am

செயற்கையான சுவையூட்டிகளை கொண்ட குளிர்பானங்கள் மற்றும் சோடாக்களை அருந்துவது ஆண் மற்றும் பெண்கள் இடையே மலட்டுத் தன்மையை உருவாக்குவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவற்றில் உள்ள அஸ்பார்டேம் (Aspartame) எனும் வேதி பொருள் பெண்களில் ஹார்மோன் பிரச்சனைகளை உருவாக்கி மலட்டுத் தன்மையை உண்டாக்குகிறது. இந்த குளிர்பானங்களை அதிக அளவில் உட்கொள்ளும் போது கருச்சிதைவு உள்ளிட்ட பல்வேறு கர்ப்பப்பை சார்ந்த பிரச்சனைகளை பெண்களிடையே ஏற்படுத்துகிறது. அஸ்பார்டேமில் உள்ள Phenylalanine மற்றும் Aspartic acids எனும் இரண்டு அமினோ அமிலங்கள் விந்தணு மற்றும் கருமுட்டையை சிதைக்கும் தன்மை வாய்ந்தவை. இதே போல் Bisphenol-A மற்றும் Caffeine போன்றவை ஆண்களில் விந்தணு குறைபாடு, ஹார்மோன் பிரச்சனை மற்றும் மலட்டுத் தன்மையை உருவாக்குகின்றன. Caffeine, பெண்களில் மாதவிடாய் பிரச்சனையை உண்டு பண்ணுகிறது. எனவே செறிவூட்டப்பட்ட மற்றும் செயற்கை சுவையூட்டி கொண்ட குளிர்பானங்கள் அருந்துவதை முடிந்த அளவிற்கு தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close