சர்வதேச விண்வெளி நிலையத்தில் தற்போது நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஸ்பேஸ் வாக்கில் ஈடுபட்டுள்ளனர். அங்கு MDM என்ற இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாரின் காரணமாக மின்சார பிரச்சனை ஏற்பட்டுள்ளது. எனவே, அதை சரி செய்ய நாசா தலைமை விஞ்ஞானி பெக்கி விட்சன் மற்றும் ஜாக் பிஷர் தற்போது விண்வெளி நிலையத்திற்கு வெளியே பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எப்போதுமே 2 MDM-கள் இருக்கும் என்பதனால், ஒன்று இல்லாவிட்டாலும் மற்றொன்று வேலை செய்யும். எனவே, இது விண்வெளி நிலையத்திற்கு பெரிய ஆபத்து இல்லை. ஆனால், அதை சரி செய்வது மிகவும் முக்கியமான பணி என நாசா கூறுகிறது. பொதுவாக சுமார் 6 மணிநேரம் ஸ்பேஸ் வாக் பயணங்கள் நடக்கும். ஆனால், இந்த முறை 2.5 மணி நேரத்தில் வேலையை முடித்து விடலாமாம்.
பிளே பட்டனை க்ளிக் செய்து நீங்களும் ஸ்பேஸ் வாக்-கை நேரலையில் பாருங்கள்.
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.