சூரியனை தொடுகிறது நாசா!!

  shriram   | Last Modified : 30 May, 2017 06:47 pm
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி கழகம் நாசா, ஒரு மாபெரும் அறிவிப்பை நாளை வெளியிடப் போவதாக கூறுகிறது. சூரியனை தொட உள்ளதாக நாசா விஞ்ஞானி ஒருவர் உலகத்திற்கு டீசர் ஒன்றை கொடுத்தார். நாளை இரவு 8.30 மணிக்கு நேரலையில் இந்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகிறது. சூரியனுக்கு மிக அருகே ஒரு செயற்கைக்கோளை அனுப்பி அதை சுற்றுப்பாதையில் நிறுத்துவதே அந்த திட்டமாம். இந்த திட்டத்திற்காக இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் கடினமான மேற்பரப்பை கொண்ட செயற்கை கோளை உருவாக்கி வருகின்றனர். 2018ஆம் ஆண்டு இந்த செயற்கைக்கோள் ஏவப்படும். சூரியனின் மேற்பரப்பு 5 லட்சம் டிகிரி செல்சியஸுக்கு மேல் இருக்கும் என கணிக்கப்படுகிறது. இந்த செயற்கைக்கோளை நிறுத்த அவர்கள் திட்டமிட்டிருக்கும் பகுதி, சுமார் 1400 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாங்க வேண்டுமாம். அதனால், அதன் மேற்பரப்பை 11.5 சென்டிமீட்டர் தடிமனான கார்பன் கலப்பு தாதுவை வைத்து உருவாக்குகின்றனர். சூரியனை நெருங்கும்போது, இந்த கோள், மனிதன் உருவாக்கிய எந்த பொருளும் செல்லாத வேகத்தில் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மணிக்கு சுமார் 7 லட்சம் கிமீ வேகத்தில் இது செல்லுமாம். இந்த கோளின் மூலம் சூரியனை பற்றி மட்டுமல்லாமல், பூமி, நட்சத்திரங்கள், என பிரபஞ்சத்தின் பல கேள்விகளுக்கு விடை கிடைக்க வாய்ப்புள்ளது என நாசா கூறுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close