முதல் விண்வெளி டெலஸ்கோப்பை அனுப்பியது சீனா

  shriram   | Last Modified : 15 Jun, 2017 06:25 pm
சீன விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனது முதல் விண்வெளி தொலைநோக்கியை இன்று காலை வெற்றிகரமாக ஏவியது. இந்த புதிய முயற்சி, விண்வெளி ஆராய்ச்சியில் சீனாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்றும், பிரபஞ்சத்தின் பல உண்மைகளை அறிய சர்வதேச விஞ்ஞானிகளுக்கு பெரிதும் உதவும் என்றும் கூறப்படுகிறது. விண்வெளியில் உள்ள கருந்துளைகள் (Black Holes), பல்சர் நட்சத்திரங்கள், மற்றும் காமா கதிர்வீச்சுக்களை இந்த டெலஸ்கோப்பை வைத்து ஆராய்ச்சி செய்யலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 2.5 டன் எடை கொண்ட இந்த எச்.எக்ஸ்.எம்.டி (Hard X-ray Modulation Telescope) ரக தொலைநோக்கி 'இன்சைட்' என அழைக்கப்படுகிறது. பூமியில் இருந்து 550 கிமீ உயரத்தில் வட்டப்பாதையில் இன்சைட் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. "மேலும் பல கருந்துளைகளையும், நியூட்ரான் நட்சத்திரங்களையும் கண்டறிய மிக ஆவலாக இருக்கிறோம். இது புவியியலில் இது பெரும் மாற்றங்களை கொண்டு வரும்," என இந்த திட்டத்தின் தலைமை விஞ்ஞானி ஸாங் ஷுவாங்னன் கூறினார். இதுவரை 20 கருந்துளைகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close