பூமி போன்ற 10 புதிய கோள்கள் கண்டுபிடிப்பு

Last Modified : 20 Jun, 2017 10:34 am
நாசாவின் கெப்லர் விண்வெளி தொலைநோக்கியானது பூமியை போன்ற 10 கோள்களை கண்டுபிடித்துள்ளது. விண்வெளியில் உள்ள புதிய கோள்கள் குறித்து ஆய்வதற்காக 2009-ஆம் ஆண்டு நாசா கெப்லர் தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியது. கெப்லர் மேற்கொண்ட விண்வெளி ஆய்வில் கிடைத்த புதிய தகவல்களை நாசா நேற்று வெளியிட்டது. அதன்படி தற்போது புதிதாக 219 புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 10 கோள்கள் பூமியை போலவே உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையை கொண்டிருப்பதாக தெரிகிறது. இந்த 10 கோள்களுக்கும் அவற்றின் சூரியனுக்கும் இடையேயான தொலைவானது, பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தொலைவை ஏறக்குறைய ஒத்துள்ளது. இதனால் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ப நீர், காற்று போன்ற ஆதாரங்கள் அங்கு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை, கெப்லர் 4,034 கோள்களை கண்டு பிடித்துள்ளது. அவற்றில் 2,335 கோள்களை மற்ற தொலைநோக்கிகளும் உறுதி செய்துள்ளன. இந்த புதிய 10 கோள்களின் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து விண்வெளியில் உள்ள பூமி போன்ற கோள்களின் எண்ணிக்கை 50-ஆக உயர்ந்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close