இந்தியாவில் அதிகரிக்கும் வெப்பநிலை: ஆய்வாளர்கள் எச்சரிக்கை

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
இந்தியாவில் 2015ம் ஆண்டு ஏற்பட்ட, அனல் காற்று காரணமாக 2500 பேர் உயிரிழந்தனர். இதில் 1700 பேர் ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். 1901ம் ஆண்டிலிருந்துதான் நம்முடைய வானிலை தொடர்பான பதிவு செய்யப்பட்ட தகவல்கள் கிடைக்கின்றன. இதை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக வெப்பநிலை அதிகரித்து வந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அனல் காற்று பாதிப்பு உள்ள பகுதிகளில் தற்போது 10 ஆண்டுக்கு ஒருமுறை மிகக் கடுமையான பாதிப்பு ஏற்படுவதாகவும், முன்பு இது 100 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நிகழ்ந்தது என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வரும் ஆண்டுகளில் இயல்பு நிலையை விட, 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை உயரலாம். இதைத் தவிர்க்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close