பூமியை விண்கற்கள் தாக்குவதை தடுக்க முடியாது!

  shriram   | Last Modified : 21 Jun, 2017 09:14 pm
வரும் 30ம் தேதி, விண்கற்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதே நாளில் 1908ம் ஆண்டு, ரஷ்யாவின் டுங்குஸ்கா காட்டுப் பகுதியில், ஒரு சிறிய விண்கல் விழுந்ததில், 2000கிமீ சுற்றவும் அந்த பகுதியே தரை மட்டமானது. அந்த பகுதியில் பொதுமக்கள் அதிகம் வாழ்வதில்லை என்பதால், அப்போது யாரும் உயிரிழக்கவில்லை. இதேபோன்ற மற்றொரு விண்கல் பூமியில் விழுந்து ஒரு சில ஊர்களையோ, நகரங்களையோ அழிக்கும் நாள் நிச்சயம் வரும், என பெல்பாஸ்ட் நகரின் குயீன்ஸ் பல்கலைக்கழகம் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். "பூமியை சுற்றி நூற்றுக்கணக்கான விண்கற்கள் உள்ளன. சிறிய பெரிய கற்கள் என நாம் அவற்றை கண்காணித்து வந்தாலும், நமக்கு தெரியாத ஆபத்தான மேலும் பல பெரிய கற்கள் இருக்க நிறைய வாய்ப்புள்ளது. அழிக்கும் சக்தி கொண்ட பெரிய கற்கள் நம்மை நோக்கி வந்தால், அவற்றை கண்காணிக்கும் முறைதான் நம்மிடம் உள்ளது. அதை தடுக்க எந்த வழியும் நம் கைவசம் இல்லை. எனவே, அதை பற்றி தீவிரமாக ஆராய்ச்சி செய்ய வேண்டும். அது நடக்குமா என்ற கேள்விக்கு இடமில்லை. எப்போது நடக்கும் என்பது தான் நாம் கேட்க வேண்டிய கேள்வி," என ஆராய்ச்சியாளர் ஆலன் ஃபிட்ஸ்ஸிம்மன்ஸ் கூறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close