• கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் தொடர்வார்: பா.ஜ தலைவர் அமித் ஷா
  • எம்.எல்.ஏ கொலையை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர் ஆதரவாளர்கள்
  • கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி பணி நீக்கம்
  • வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்க அதிபர் ட்ரம்ப் தயார்: வெளியுறவுத்துறை செயலாளர்
  • நாகப்பட்டினம் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது பெண் குழந்தை பத்திரமாக மீட்பு

சனிக்கோளின் புகைப்படத்தை வெளியிட்ட நாசா

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

சனிக்கோளின் புகைப்படம் ஒன்றை நாசா, அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, சனிக்கோள் குறித்து ஆய்வு நடத்துவதற்காக, 1997 ஆம் ஆண்டு காஸினி விண்கலத்தை அனுப்பியது. ஏழு ஆண்டுகள் தொடர் பயணத்துக்குப்பின், 2004 ஆம் ஆண்டு சனிக்கோளின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது. சனி மற்றும் அதன் துணைக்கோள்கள் குறித்த தகவல்களை, கடந்த 13 ஆண்டுகளாக இந்த விண்கலம் தொடர்ந்து அனுப்பி வருகிறது. இந்நிலையில், சனிக்கோளில் விடியல் எப்படி இருக்கும் என்பதை காட்டும் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. மேலும், இருள் சூழ்ந்த சனிக்கோளை சுற்றியிருக்கும் பனிப்படல வளையங்களை அழகாகப் படம் பிடித்துள்ளது. சனிக்கோளிலிருந்து சுமார் 10 லட்சம் கி.மீ தூரத்தில் இருந்து இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்புகைப்படம் மார்ச் மாதம் 31 ஆம் தேதி எடுக்கப்பட்டதாகும்.சனிக்கோளுக்கும் அதன் வளையத்துக்கும் இடையே மொத்தம் 22 முறை டைவ் செய்யும் காஸினி விண்கலத்தின் பயணத்துக்கு 'கிராண்ட் ஃபைனல்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close