இன்னைக்கு கூகுள் டூடுல்ல இதைக் கவனிச்சீங்களா..!?

  jvp   | Last Modified : 10 Jul, 2017 05:35 pm

கூகுள் டூடுல்ல எதாவது சிறப்பு தினங்களின் போது அதனைக் குறிப்பிடும் விதமா முகப்புல பதியிறது வழக்கம். அந்த வகையில இன்னைக்கு பார்த்தீங்கன்னா உருளைக்கிழங்கு படம் போடப்பட்டிருக்கும். இது எதுக்குன்னா எவா எக்ப்லாட் என்பவரோட 294வது பிறந்தநாளைக் கெளரவிக்கிறதுக்குத்தான். அதெல்லாம் சரி, அவர் யாருன்னு கேக்குறீங்களா? அவர்தான் உருளைக்கிழங்கிலிருந்து வைன், வோட்கா, மாவு எல்லாம் தயாரிச்சவர். 1746ல தான் இந்த சாதனையைப் பண்ணினார். இதில், புகழ்பெற்ற 'ராயல் அகாடமி ஆஃப் சயின்ஸ்'ல தேர்வு செய்யப்பட்ட முதல் பெண்ணே இவர்தான்றதுதான் ஹைலைட்டே. 1748ல் அந்த அகாடமியில அவர் இணையிறபோது அவரோட வயசு 24தான். அவருக்குப்பின் அந்த அகாடமியில் ஒரு பெண் சயிண்டிஸ்ட்டைச் சேர்க்க 200 வருஷத்துக்கு மேல (1951) ஆகிருக்குனா பார்த்துக்கங்க.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close