முடிவுக்கு வருகிறதா விண்டோஸ் போன்கள்..!?

  jvp   | Last Modified : 12 Jul, 2017 04:39 pm
மைக்ரோசாஃப்டின் விண்டோஸ் 8.1 இயங்குதளம் இனி எந்த மொபைல்களிலும் இயங்காது என செய்திகள் வெளியாகியுள்ளது. இனிமேல் எந்தவித அப்டேட், செக்யூரிட்டி பேட்ச், பக் ஃபிக்ஸ் போன்றவை விண்டோஸ் போன் இயங்குதளத்திற்கு வழங்கப்பட மாட்டாது. இதனால் விண்டோஸ் போன் 8.1 அல்லது அதற்கும் பழைய இயங்குதளங்களை பயன்படுத்துவோர் தங்களது சொந்த விருப்பத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 8.1க்குப் பிறகு சில லூமியா போன்களில் விண்டோஸ் 10ஐ அறிமுகம் செய்வோம் என முன்பு அறிவித்திருந்தனர். ஆனால் அப்டேட் செய்யப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரும்பாலான விண்டோஸ் போன்களுக்கு வாட்ஸ்ஆப் சேவை நிறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close