லட்சம் கோடி டன் ஐஸ் பாறை உடைந்தது... கடல் மட்டம் உயருமா?

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 14 Jul, 2017 10:27 am
மேற்கு அண்டார்டிக் கடல் பகுதியில் லட்சம் கோடி டன் எடைகொண்ட ஐஸ் பாறை உடைந்திருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் ஐஸ் பாறை உடைந்திருக்கிறது. 5800 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த ஐஸ் பாறையின் உயரம் மட்டம் 350 மீட்டர். இதற்கு ஏ68 என பெயரிடப்பட உள்ளது. இந்த பெருவெடிப்பு காரணமாக அண்டார்டிக்காவின் வரைபடமே மாறிவிட்டது. ஏற்கனவே கடலில் மிதந்துகொண்டிருந்த ஐஸ் பாறை உடைந்திருப்பதால் கடல் மட்டம் திடீரென்று உயரும் என்று இல்லை. ஆனால், சில இன்ச் அளவுக்குக் கடல் மட்டத்தை இது உயர்த்தலாம். மேலும், கப்பல், படகுகள் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வளவு பெரிய பரப்பளவு கொண்ட ஐஸ் நிலப்பரப்பு நகர்ந்து, கரைய ஆரம்பிக்கும். அப்போது இன்னும் பல துண்டுகளாக உடையும். அப்போது இதன் பாதிப்பு அதிகமாகலாம். தொடர்ந்து இந்த ஐஸ் பாறை கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று சுவான்சி பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஐஸ் பாறைகள் உடைவதற்குப் புவி வெப்பமயமாதல் முக்கியக் காரணமாக இருக்கிறது. தொழில் புரட்சிக்குப் பிறகு மனிதர்களின் செயல்பாடு காரணமாக, புவி வெப்பநிலை 1.8 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகரித்திருக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். புவி வெப்பமயமாதலால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட பகுதி அண்டார்ட்டிக்கா என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close