சரஸ்வதி - இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்த விண்மீன் கூட்டத் தொகுப்பு

Last Modified : 01 Jan, 1970 05:30 am
புனேவை சேர்ந்த வானவியல் அறிஞர்கள் சிலர் இதுவரை கண்டுபிடிக்கப்படாத மிகப்பெரிய விண்மீன் கூட்டம் அடங்கிய தொகுப்பு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். சரஸ்வதி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்மீன் கூட்டத் தொகுப்பானது பூமியில் இருந்து 4 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது (ஒரு ஒளியாண்டு என்பது 9.461 x 10^12 கி.மீ). இந்த தொகுப்பானது 10 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றி இருக்கலாம் என்றும், இதில் உள்ள 42 தொகுப்பிலும் 10,000-க்கும் மேற்பட்ட விண்மீன் கூட்டம் இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த விண்மீன் கூட்டத் தொகுப்பின் மொத்த எடையானது சூரியனின் எடையை(1.989 × 10^30 கிலோகிராம்) விட 20 மில்லியன் பில்லியன் மடங்கு பெரியதாகும். ஒட்டுமொத்த பிரபஞ்சத்திலேயே கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய விண்மீன் கூட்டத்தொகுப்பு இதுவாகும். இதுவரை 10 மில்லியன் விண்மீன் கூட்டத்தொகுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close