2018ல் விண்ணில் பாய்கிறது சந்திரயான்-2

Last Modified : 21 Jul, 2017 04:53 pm
ராமேஸ்வரம் வந்துள்ள இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, மரியாதை நிமித்தமாக டாக்டர் அப்துல் கலாம் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு பத்திரிகைக்கு பேட்டியளித்த அவர், "சந்திரயான்-2 மற்றும் மங்கள்யான் செயற்கைகோள் பணிகள் முடிவையும் தருவாயில் உள்ளது. சந்திரயான்-2 செயற்கைகோள் 2018ம் ஆண்டு விண்ணில் ஏவப்படும்" என்று தெரிவித்துள்ளார். சந்திரயான்-1 வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தகவல்களை அனுப்பும் எனவும் கூறியுள்ளார். 2008ம் ஆண்டு முதல்முதலாக நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான்-1, 2009ம் ஆண்டு காணாமல் போனது, கடந்த மார்ச் மாதம் நாசாவால் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சந்திரயான்-1 நிலவைச் சுற்றி கண்காணித்து வருகிறது, அதே போல் இஸ்ரோவின் மற்றொரு சாதனையாக மங்கள்யான் விண்கலம் செப்டம்பர் 2014ம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டது. மிகவும் குறைந்த செலவில்(454 கோடி) இந்தியாவில் இருந்து செவ்வாய்க்கு வெற்றிகரமாக அனுப்பப்பட்ட முதல் செயற்கைகோள் என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close