மண்ணை காப்பாத்தணும்... செய்வீங்களா?

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

காய்கறி, கடலை மிட்டாய்ல ஆரம்பிச்சு கசாப்பு கடை வரை பளபள, வழுவழுன்னு இருக்கற பிளாஸ்டிக் கவரத்தான் நாம எல்லாத்துக்கும் யூஸ் பண்றோம். கையேந்தி பவன்ல கூட சுத்தம் சுகாதாரம்னு உளறி பிளாஸ்டிக்கை நம்ம தலைல கட்டிட்டாங்க. இன்னைக்கு நாம காலைல இருந்து நைட் வரை பிளாஸ்டிக்காலான பொருளை உபயோகிக்காமல் ஒரு நாள் கூட இருக்க முடியாதுங்கறது உண்மை. எல்லா விஷயத்துலயும் வேகம் வேணும்ன்னு நெனைக்கற நமக்கு, கோடானு கோடி வருஷம் பழமையான பூமியை அழிவோட விளிம்புல நிறுத்த ஜஸ்ட் 60+ வருஷம் தான் ஆச்சு. ஆமாங்க! பிளாஸ்டிக்கை நாம 1950களில் தான் யூஸ் பண்ண ஆரம்பிச்சோம். 2015ஆம் ஆண்டு வரை மொத்தமா 830 கோடி டன் (1 டன் = 1000 கிலோ) பிளாஸ்டிக்கை உற்பத்தி செஞ்ச நாம, மொத்த உற்பத்தியில் பாதியை கடந்த 13 ஆண்டுகள்ல தான் செஞ்சோம். அதுல, 630 கோடி டன் பிளாஸ்டிக்... குப்பைதாங்க! இதுல வெறும் 9% தான் மறுசுழற்சி (recycle) செஞ்சுருக்கோம், 12% எரியூட்டப்பட்டது... மீதமுள்ள 79% குப்பையா நம்ம மண்ணுல. இதே ரேஞ்சுல போனா 2050 க்குள்ள 1200 கோடி டன் கழிவுகளை நாம உரமாக்க முயற்சி செஞ்சுருப்போம். ஆனா, வருத்தமான விஷயம் என்னன்னா சில நூறு வருஷம் ஆனாலும் இதுங்க மக்காம நம்ம குழந்தைகளுக்கு விஷமா மாறும். அது எப்படி? கடல்ல சேர்ற ஒரு பிளாஸ்டிக் கப் மக்க 400 வருஷம், குழந்தைகளுக்கான டயபர் 450 வருஷம், மீன் பிடிக்குற தூண்டில் நரம்பு 600 வருஷமும் பிடிக்கும். இது கடல்ல! ஆனால் இதுங்க நிலத்தில் புதைஞ்சுட்டா கேக்கவே வேணாம். பிளாஸ்டிக் மக்க மக்க, நிலத்தடி நீர் விஷமாயிரும், அதுல்லருந்து கிளம்புற மீத்தேன் வாயு பூமியை சூடாக்கும். மேலும் இதுல்லேருந்து வெளி வர்ற கெமிக்கல்ஸ் கேன்சர், பிறவிக் குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கிறதுன்னு சங்கோஜப் படாமல் நம்மள 'வச்சு செஞ்சுரும்'. நம்ம மட்டும் போனா பரவாயில்ல ஆனா கடல், நிலம், காத்தை நம்பி இருக்கற எல்லா உசுருக்கும் இதே கதிதான். மண்ணை மலடாக்கி, கடலை கழிவாக்கி மனுஷன் செய்யற தற்கொலை முயற்சிய தடுக்க உங்களால என்ன செய்ய முடியும்? - அடுத்த முறை அண்ணாச்சி கடைக்கு போகும் போது மறக்காமல் அந்த 'மஞ்ச' பையை எடுங்க - சிரமம் பாக்காம கையில் ஒரு வாட்டர் பாட்டில் வச்சுக்கோங்க. கடைல வாட்டர் பாட்டில், பாக்கெட் வாங்கி வீச வேண்டிய அவசியம் இருக்காது - 'குட்டிஸ்'க்கு கோவணம் கட்டலாம்... ஆமாம் துவைச்சு தான் எடுக்கணும்! ஆனா கையை கடிக்காது - பிளாஸ்டிக் பாட்டில்களில் உள்ள பொருட்களுக்கு பதில் பாக்ஸில் அடைக்கப் பட்டவைகளை வாங்கலாம் - ஃபிரிட்ஜில் வைக்க பீங்கான் மற்றும் கண்ணாடியால ஆன பாத்திரங்கள யூஸ் பண்ணலாம். ஆனா கொஞ்சம் கவனமா இருக்கனும் - மறுசுழற்சி செய்ய ஏத்த மாதிரி தரம் பிரிச்சு குப்பைல போடுங்க இன்னும் ஐடியாக்கள் வேணும்ன்னா வீட்ல ஆச்சி கிட்ட கேளுங்க. இது உங்க மண்ணு, இதை பாதுகாப்பா, ஆரோக்கியமா வச்சுருக்கறது உங்க கடமை. படிச்சுட்டு உங்களுக்கு ஏதாவது செய்யணும்னு யோசனை வந்தா மத்தவங்களுக்கு எடுத்து சொல்லுங்க, ஈசியா விஷயத்தை 4 பேருக்கு ஷேர் பண்ணுங்க. நீங்க கரெக்டான முடிவு எடுப்பீங்கன்னு எங்களுக்கு நம்பிக்கை இருக்கு.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.