"ஜூக்கர்பர்குக்கு ஒண்ணும் தெரியாது": டெஸ்லா தலைவர் பாய்ச்சல்

  shriram   | Last Modified : 25 Jul, 2017 10:30 pm

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன தலைவர் ஈலான் மஸ்க், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்கை கடுமையாக விமர்சித்துள்ளார். AI எனப்படும் செயற்கை அறிவை உருவாக்குவதில், உலகின் பல முன்னணி விஞ்ஞானிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். டெர்மினேட்டர், மேட்ரிக்ஸ், ஷங்கரின் இயந்திரன் போன்ற திரைப்படங்களில் வருவது போல, செயற்கை அறிவு கொண்ட இயந்திரங்கள் உருவாக்கப்பட்டால், அவை மனிதர்களுக்கு எதிராக செயல்படத் துவங்கும் என்ற கருத்து நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. செயற்கை அறிவு போன்ற ஆராய்ச்சிகளை நடத்துவதற்கு அரசு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என மஸ்க் வலியுறுத்தி வருகிறார். 'அயர்ன் மென்' திரைப்படத்தில் ஹீரோ, தனது வீட்டை ஜார்விஸ் என்ற ஒரு செயற்கை அறிவு கொண்ட செயலியின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். அதேபோல, ஒரு சிறிய செயற்கை செயலியை உருவாக்கி அதன் கட்டுப்பாட்டில் தனது வீட்டை வைத்துள்ளார், பேஸ்புக்கின் ஜூக்கர்பர்க். மேலும், செயற்கை அறிவு கொண்ட இயந்திரங்களை உருவாக்குவதற்கு எதிராக ஈலான் மஸ்க் போன்றவர்கள் பேசிவருவது வேடிக்கையாக உள்ளது என சமீபத்தில் ஜூக்கர்பர்க் கூறினார். இதற்கு பதிலடி கொடுப்பது போல நேற்று பேசிய மஸ்க், "இதைப்பற்றி மார்க்கிடம் நான் பேசியுள்ளேன். இதன் விவரங்கள் அவருக்கு சரியாக புரியவில்லை," என கூறியுள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close