நிலவிலே இந்திய கொடியேற்றும் இளைஞர்கள்!!

  shriram   | Last Modified : 31 Jul, 2017 04:17 am
அடுத்த வருடம் இந்தியாவிலிருந்து இரண்டு செயற்கைகோள்கள் நிலவை நோக்கி செலுத்தப்படுகின்றன. 'சந்திரயான் 2' செயற்கைக்கோளை முதலில் இஸ்ரோ நிலவுக்கு அனுப்புகிறது. இது முன்பு திட்டமிட்டதை விட நிலவில் அதிக தூரம் சென்று ஆராய்ச்சி செய்ய இருக்கிறது. இதுபோக 'டீம் இண்டஸ்' என்ற ஒரு இளைஞர்கள் விண்வெளி குழு, நிலவிற்கு ஒரு செயற்கைக்கோளை அனுப்பி, இந்திய கோடியை அங்கு ஏற்ற திட்டமிட்டுளளது. ராகுல் நாராயணன் என்ற விண்வெளி ஆர்வலர் தலைமையில், பெரும்பாலும் இளைஞர்கள், மற்றும் மாணவர்கள் அடங்கிய குழு தான் இந்த டீம் இண்டஸ். உலகம் முழுவதும் உள்ள விண்வெளி ஆர்வலர்களுக்காக நடத்தப்படும் Lunar XPRIZE என்ற போட்டிக்காக இந்த அணி, செயற்கைக்கோளை வடிவமைக்கிறது. இன்போசிஸ் துணை நிறுவனர் நந்தன் நிலேகானி இந்த அணிக்கு நிதியுதவி செய்கிறார். டீம் இண்டஸின் செயற்கைக்கோள், பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் அனுப்பப்படுகிறது. 'சந்திரயான் 2' ஜிஎஸ்எல்வி மூலம் அனுப்பப்படுகிறது. நிலவில் ஒரு செயற்கை ரோபோட்டை அனுப்பி, 500 மீட்டர் தூரம் சென்று, HD தரத்துடன் படம் பிடித்து, அதை வெற்றிகரமாக பூமிக்கு திரும்ப அனுப்ப வேண்டும் என்பது தான் இந்த போட்டியாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close