ஃப்ளாப்பான பேஸ்புக்கின் செயற்கை அறிவு திட்டம்

  shriram   | Last Modified : 01 Aug, 2017 05:15 pm
சமீபத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க் செயற்கை அறிவை உருவாக்கும் திட்டங்களில் முதலீடு செய்ய துவங்கியுள்ளார். தனது வீட்டை ஒட்டுமொத்தமாக நிர்வகிப்பதற்காக தானாகவே சிந்திக்கும் ஒரு சிறிய செயலியை உருவாக்கினார். டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் ஈலான் மஸ்க், "செயற்கை அறிவு குறித்து மிகவும் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். இயந்திரங்கள் அறிவு கொண்டால் அது உலகிற்கு மிக ஆபத்தாக அமைய வாய்ப்புள்ளது," என கூறி வருகிறார். இதை மார்க் ஜுக்கர்பர்க் மறுத்து பேச, "இதைப்பற்றி மார்க்குக்கு அவ்வளவாக தெரியாது," என கடந்த வாரம் மஸ்க் விமர்சித்திருந்தார். இந்நிலையில், பேஸ்புக் நிறுவனத்தின் ஆய்வு பிரிவில், செயற்கை அறிவு கொண்ட இரண்டு இணைய ரோபோட்கள் உருவாக்கப்பட்டன. இரண்டும் ஒன்றுடன் ஒன்று தானாகவே பேசிக்கொள்ள வைப்பது தான் விஞ்ஞானிகளின் நோக்கம். அவற்றை செயல்படுத்த துவங்கியவுடன், சிறிது நேரத்தில் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்த ரோபோட்கள், திடீரென யாருக்குமே புரியாத வார்த்தைகளால் பேசத் துவங்கின. பின்னர் தான் தெரிந்தது அந்த ரோபோட்கள், தாங்களாகவே புதிய மொழி ஒன்றை உருவாக்கி பேசிகொண்டிருந்தன என்று. பதறிய விஞ்ஞானிகள் உடனடியாக இரண்டு ரோபோட்களின் தொடர்பையும் துண்டித்தனர். பல விஞ்ஞானிகள், இயந்திரங்களுக்கு அறிவு கொடுத்தால், அவை மனிதர்களை மீறி செயல்படும் என எச்சரித்து வரும் நிலையில், இந்த சம்பவம் விஞ்ஞானிகள் மத்தியில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close