கருவிலேயே மரபணு மாற்றம்; அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை

Last Modified : 03 Aug, 2017 10:56 am
மரபணு மாற்ற குறைபாடுகளால் உண்டாகும் நோய்களை கருவிலேயே கண்டறிந்து சரி செய்யும் முறையை அமெரிக்க விஞ்ஞானிகள் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளனர். அமெரிக்காவின் ஒரேகான் ஹெல்த் அண்ட் சயின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் செளகரத் மிதாலிபொவ், Crispr or Cas9 எனும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இதனை வெற்றிகரமாக செய்துள்ளார். செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட கரு ஒன்றின் மரபணுவில், இதய குறைபாட்டிற்கு காரணமான செல்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதனை அடுத்து அந்த குறிப்பிட்ட மரபணு தொகுதியை மட்டும் விஞ்ஞானிகள் தனியாக பிரித்து சரி செய்துள்ளனர். இதன் பிறகு அந்த கருவானது இயல்பான வளர்ச்சியை அடைந்துள்ளது. விஞ்ஞானிகளின் இந்த முயற்சியால் எதிர்க்காலத்தில் தாயின் வயிற்றில் இருக்கும் போதே குழந்தைகளின் மரபணு குறைப்பாட்டை கண்டறிந்து அவற்றை சரி செய்ய முடியும். சோதனைக்கு உட்படுத்தப்பட்ட கருவை, முழு வளர்ச்சி அடைய வைக்கும் திட்டம் இல்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கருவின் மரபணுவில் மாற்றம் செய்யவில்லை, குறைபாடு உள்ள மரபணுவை மட்டுமே நீக்கி உள்ளோம். இந்த ஆய்வை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல அமெரிக்காவின் தேசிய அறிவியல், பொறியியல் மற்றும் மருத்துவ அகாடமி அனுமதி அளித்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்தாலும், மரபணு மாற்ற முறையால் விபரீதங்கள் ஏற்படும் எனவும் சிலர் எச்சரித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close