நாளை சந்திர கிரகணம் : அமெரிக்கா பார்க்க முடியாது; இந்தியா பார்க்கலாம்

Last Modified : 06 Aug, 2017 06:51 am
சந்திர கிரகணம்: சூரியன், பூமி, நிலவு ஆகியவை, மிகத்துல்லியமாகவோ அல்லது ஏறத்தாழவோ, ஒரே வரிசையில் வரும்போது மட்டுமே ஏற்படும். சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி செல்லும் போது, நிலவுக்கு கிடைக்க கூடிய ஒளியை பூமி மறைத்துக் கொள்ளும்போது சந்திர கிரகணம் உருவாகிறது. நாளை இரவு ஏற்படும் இந்த சந்திர கிரகணம் இரவு 10.20 மணி முதல் நள்ளிரவு 12.05 வரை நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏறத்தாழ 2 மணி நேரம் நீடிக்கும் இந்த வான் நிகழ்வை நம் வெறுங்கண்ணால் பார்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், இதனை இந்தியா உள்பட அனைத்து ஆசிய நாடுகளிலும் காணலாம் என்று தெரிவித்த வானிலை ஆராய்ச்சியாளர்கள், அதேவேளையில், வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் இந்த நிகழ்வு நடைபெறும் நேரமானது பகல் வேளையாக இருக்கும் என்பதால் அங்கு கிரகணத்தைக் பார்க்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close