• ராகுல் இல்லத்திற்கு வெளியே சிறப்பு யாக பூஜை
  • ராஜஸ்தானில் பா.ஜ.க முன்னிலை
  • 5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
  • விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு
  • ரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் ராஜினமா!

அண்டார்டிகாவுக்கு அடியில் 91 எரிமலைகள்! கடல் மட்டம் உயருமா?

  shriram   | Last Modified : 16 Aug, 2017 03:19 pm

தென்துருவத்தில் உள்ள அண்டார்டிகா கண்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு மிகப்பெரிய பனிபரப்பின் அடியில் 91 எரிமலைகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இவை, சுமார் 2.5 மைல்கள் ஆழத்தில் உள்ளதாம். புவி வெப்பமயமாதலால் இரு துருவங்களில் உள்ள பனி மலைகளும், பனிப் பாறைகளும் உருகி வருகின்றன. ஆண்டுக்கு சுமார் 13,000 கோடி டன் அளவுக்கு பனிப்பாறைகள் உருகி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இது கடலில் கலப்பதனால், கடல் மட்டம் உயர்ந்து, அடுத்த நூற்றாண்டில், அது பல கடலோர பகுதிகளை மூழ்கடிக்கும் என கூறுகின்றனர். இதனால், 2100ம் ஆண்டுக்குள் 3.2 அடி அளவுக்கு உலகம் முழுவதும் கடல்மட்டம் உயரும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அங்கு இதுபோன்ற எரிமலைகள் இருப்பது மேலும் அச்சத்தை கிளப்பியுள்ளது. சுமார் 1800 மைல்கள் நீளமுள்ள ஒரு பகுதியில், 300 அடி முதல் 12,000 அடி உயரம் கொண்ட எரிமலைகள் உள்ளதாக ஸ்கட்லாந்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக இந்த வருடம் நடந்த மற்றொரு ஆராய்ச்சியை இதனுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, அந்த பகுதியில் மொத்தம் 138 எரிமலைகள் இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. உலகிலேயே ஒரே இடத்தில் இவ்வளவு எரிமலைகள் இருப்பது இங்குதான். ஆனால், இந்த எரிமலைகள், தூங்கும் எரிமலைகளா அல்லது, வெடிக்கும் பண்பு கொண்டதா என இதுவரை தெரியவில்லை. அப்படி அவை வெடித்தால், அந்த பகுதியில் பனி உருகுவது பன்மடங்கு அதிகரித்துவிடுமாம். இத்தனை ஆண்டுகள் கழித்து தீவிர ஆராய்ச்சிக்குப் பிறகுதான் அங்கு எரிமலை இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. எனவே, உலக நாடுகள் புவி வெப்பமடைதலைத் தடுக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.