அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா புதிய கிரகம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. கெப்ளர் ஸ்பேஸ் டெலஸ்கோப் மூலம் இந்த கிரகத்தை கண்டுபிடித்ததால் இதற்கு k2-33b எனப் பெயரிட்டுள்ளனர். இதன் வயது ஐந்து முதல் பத்துமில்லியன் வருடங்கள் இருக்கலாம் என கணக்கிட்டுள்ளனர். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களிலேயே இது தான் மிக குறைந்த வயதுடையதாம். இதன் முலம் கிரகங்கள் உருவாக்கம் பற்றி அறிந்துக் கொள்ளமுடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.