சூரிய கிரகணத்தின்போது என்ன செய்யலாம்... செய்யக்கூடாது?

  ஐஸ்வர்யா   | Last Modified : 10 Aug, 2018 12:51 pm
womens-don-t-do-these-kind-of-things-in-solar-eclips

பொதுவாக சூரிய, சந்திர கிரகணம் என்பது கெட்ட சகுணம் எனவே தீவிபத்து போன்றவை ஏற்பட வாய்ப்பு இருக்கும் என பெரியவர்கள் கூறுவார்கள்... ஆனால் கிரகம் முகவும் புனிதமானது. கிரகணம் மனிதர்களுக்கு மட்டுமின்றி தேவர்கள், கந்தர்வர்கள், பித்ருக்களுக்கு கூட புண்ணிய காலம் என புராதனமான நூல்களில் கூறப்பட்டுள்ளது. 

பெண்களுக்கு ஏற்படும் ஆபத்துகள்

* கிரகணத்தில் பெண்கள் சாப்பிட, உடலுறவுகொள்ள கூடாது. 

* கர்ப்பிணிகள் உடலில் வெளிச்சம் படாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். 

* சூரியக்கதிர் வீச்சு பலமாக இருக்கும் என்பதால், ஆரம்ப நிலையில் உள்ள கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளதாக மரபு வழி மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

* பிரசவ தேதியை நோக்கி காத்திருக்கும் பெண்களுக்கு, கதிர்வீச்சு காரணமாக சிசுவின் உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படலாம். குறைபாடுகள் ஏற்படலாம்.

* சூரிய கிரகணத்தின்போது வெளியே செல்லும் கர்ப்பிணிகளின் குழந்தை கண்பார்வையில் குறைபாடு ஏற்படலாம் என்ற மூடநம்பிக்கை நிலவுகிறது. 

* சூரியகிரகணத்தின்போது பெண் வெளியே சென்றுவிட்டு வரும்போது அவர்கள் கடுமையான தலைவலி உணர்வதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

* மனநல குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் சூரிய கிரகணத்தின்போது சில மாற்றங்கள் காணப்படும் என்றும் கூறப்படுகிறது. எனவே மனநிலை பாதிக்கப்பட்டவர்களை வீட்டில் உள்ளவர்கள் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

* மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சூரிய கிரகணத்தின்போது ஒருவித பயஉணர்ச்சியும், தேவையில்லாத கோப குணமும் ஏற்பட வாய்ப்புண்டு.

* வயதான பெண்களுக்கு தலைவலி, பலவீனம், நீண்டகால நோயின் வீரியம் அதிகரிக்கும்.  

* பெண்கள் சூரியனை நேரடியாக பார்த்தால் கண்களில் உள்ள  நிறமி பாதிக்கப்படும்.

இன்றைய காலக்கட்டத்தில் செல்ஃபி மோகம் அதிகரித்துவிட்டது. எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் செல்ஃபி எடுப்பது, புகைப்படம் எடுப்பது இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை வாடிக்கையாகிவிட்டது. இதுபோன்ற நிகழ்வுகளை படம்படிக்க, அதிநவீன காமிராவுடன் புகைப்படக் கலைஞர்கள் உள்ளனர். எனவே, எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் அதில் முழுமையாக பங்கேற்பது, பாதிப்பு என்றால் உதவுவது போன்ற காரியங்களில் ஈடுபட வேண்டும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close