100 கோடி பேரை தொட்டது பேஸ்புக் மெஸஞ்சர்!

  shriram   | Last Modified : 21 Jul, 2016 02:56 pm

பேஸ்புக் மெஸஞ்சர் சேவையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 100 கோடியை கடந்துள்ளது! இதற்கு முன் இத்தகைய சாதனையை வெகு சில செயலிகளே நிகழ்த்தியுள்ளன. இதனை கொண்டாடும் விதத்தில் புது எமோஜி ஒன்றை அந்நிறுவனம் இலவசமாய் வழங்கியுள்ளது. உலகின் மொத்த இணைய வழி தொலைபேசி அழைப்புகளில் 10 சதவிகிதம் பேஸ்புக் மெஸஞ்சர் வழியாகவே நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 1700 கோடி புகைப்படங்களும் 2 கோடியே 20 லட்சம் GIF படங்களும், விநாடிக்கு 250 படங்கள் வீதம் இந்த செயலியின் மூலம் பகிரப்படுகிறது. எம்மாடி!

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close