பேஸ்புக்கின் ஆளில்லா விமானம் மூலம் இணைய சேவை வெற்றி

  mayuran   | Last Modified : 22 Jul, 2016 01:17 pm

உலகின் பின்தங்கிய பகுதிகளுக்கு அதிவேக இணையத்தை வழங்க பேஸ்புக் ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. ஆளில்லா சூரிய சக்தியில் இயங்கும் விமானம் மூலம் இணையத்தை வழங்கும், முதல் கட்ட சோதனையில் பேஸ்புக் வெற்றி கண்டுள்ளது. பிரிட்டிஷ் கட்டுமானத்தில் உருவாகிய இந்த ஆளில்லா விமானமானது சுமார் 90 மணி நேரம் வானில் பறந்துள்ளது. பல பில்லியன் வாடிக்கையாளர்களின் இணைய தேவையை பூர்த்தி செய்ய, வாரக்கணக்கில் இந்த இணைய விமானத்தை இயக்க, தொழில்நுட்ப ரீதியாக இன்னும் முன்னேற்றம் தேவைப்படுகிறது என பேஸ்புக் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close