சச்சின் சாகா கேம் விளையாட ரெடியா ?

  mayuran   | Last Modified : 22 Jul, 2016 06:46 pm

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அந்தவகையில் இவரை வைத்து புனே மற்றும் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று புதிய கேம் ஒன்றை வடிவமைத்துள்ளது. 'சச்சின் சாகா' என்ற பெயரில் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளத்தில் விளையாடக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. நம்மை சச்சினாக உருவகித்துக் கொண்டு கேம் ஆட இதில் வசதியுள்ளது. அடுத்த சில மாதங்களில் பயன்பாட்டுக்கு வரவுள்ள இந்த கேமை வடிவமைக்க சச்சினும் உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close