செவ்வாய் கிரக பயணத்திற்காக ஆழ்கடல் பயிற்சி நடத்தும் நாசா

Last Modified : 23 Jul, 2016 07:02 pm

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவது குறித்து பல ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் நாசா தற்போது NEEMO 21 எனும் ஆழ்கடல் சோதனையை நடத்தி வருகிறது. இதற்காக இந்த மாதம் 21-ம் தேதி ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று அட்லாண்டிக் பெருங்கடலில் 62 அடி ஆழத்தில் அமைந்துள்ள சிறப்பு ஆழ்கடல் தளத்திற்கு சென்றது. ஆழ்கடல் சூழ்நிலை விண்வெளியோடு ஒத்து இருப்பதால் ஆராய்ச்சியாளர்களுக்கு விண்வெளியில் இருப்பது போல் தோன்றும். இதன் மூலம் செவ்வாய் கிரக பயணம் குறித்த பயிற்சி நடத்த உதவியாக இருக்கும் என நாசா தெரிவித்துள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close