அமெரிக்காவில் Drone மூலம் உணவுப் பொருட்களை விநியோகம் செய்யும் முறையை 7-Eleven என்ற தனியார் நிறுவனம் ஆரம்பித்துள்ளது. Reno என்ற நகரில் இருந்து சில மைல்களுக்கு அப்பால் உள்ள வீடுகளுக்கு உணவுப் பொருட்களை சிறிய ட்ரோன் மூலம் விநியோகம் செய்யும் திட்டத்தை முதல் முதலாக ஆரம்பித்த இந்த நிறுவனம், ஒரு வீட்டிற்கு தேவையான பொருட்களை 2 Container கள் மூலம் அனுப்பி வைக்கிறது. பொருள் ஆர்டர் செய்தவரின் முகவரி GPS மூலம் அறியப்பட்டு குறித்த இடத்தில் டெலிவரி செய்யப்படுகிறது.