கனடாவின் மிசிசாகாவில் உள்ள பெல் நிறுவனம், நோக்கியா நிறுவனத்துடன் இணைந்து ஐந்தாம் தலைமுறைக்கான 5G தொழில் நுட்பத்தை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இதன் மூலம், கனடாவின் தற்போதைய சராசரி 4Gயை விட ஆறு மடங்கு அதிக வேகம் இருக்குமாம். மேலும், கனெக்டிவிட்டி பிரச்னைகள் பெரிய அளவில் குறைக்கப்படும் என உறுதி அளிக்கிறார்கள் பெல் நிறுவனத்தினர். இன்னும், பல்வேறு கட்ட ஆராய்ச்சிகள் தேவைப்படுவதால், இந்த 5G தொழில்நுட்பம் நடைமுறையில் வருவதற்கு குறைந்தது 5 முதல் 7 ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகிறது.
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.