பேஸ்புக் நிறுவனம் நம்மைச் சுற்றிலும் நடைபெறும் விஷயங்களைத் தவறாமல் பதிவு செய்வதற்கு வசதியாக ‘சரவுண்ட் 360’ என்ற நவீன கேமராவை வெளியிட்டுள்ளது. 17 கேமரா முகங்கள் கொண்ட இது, தன்னைச்சுற்றி நாலாப்புறமும் நடைபெறும் நிகழ்வுகளை எளிதாகப் பதிவு செய்து விடும். செல்பி மோகத்தில் மூழ்கியுள்ள இளைய தலைமுறையினரிடம் போட்டோ கிராபி மற்றும் வீடியோகிராபி ஆர்வத்தைத் தூண்ட வந்துள்ள இந்த நவீன கேமராவில் பதிவாகும் காட்சிகளை பேஸ்புக்கில் வெளியிடலாம். இதன் விலை 30 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் ஆகும்.