நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன நெரிசலுக்கு முடிவு கட்டும் விதமாக 'உயர்த்தப்பட்ட டிரான்சிட்' பேருந்தை சீன நாட்டு பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர். 72.2 அடி நீளமும், 25.3 அகலமும் , 15.8 அடி உயரமும் கொண்ட இப்பேருந்தில் 300 பேர் பயணிக்கலாம், அதே நேரத்தில், 6.6 அடி உயரம் கொண்ட கார்கள் இந்தப் பேருந்தின் கீழாக பயணிக்க ஏதுவாகவும் இது தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாயன்று அங்குள்ள ஹெபெய் மாகாணத்தின் கின்குவாண்டோ நகரில் இந்தப் பேருந்து அறிமுகப்படுத்த ப்பட்டுள்ளது.