ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் காடிகாரமான Apple Watch 2-வை இவ்வருட இறுதிக்குள் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. இது, தற்போது உள்ள கைக் கடிகாரங்களை விடவும் அதிக வேகமான Processor-ஐ கொண்டதாகவும், நேரத்திற்கு மின் சக்தியை வழங்கக்கூடிய அளவில் பெரிய பேட்டரியும், GPS வசதி உட்பட மேலும் சில புதிய அம்சங்கள் இருப்பதாகவும் தெரிகிறது. அத்துடன் நீர் உட்புகாத தொழில்நுட்பத்தினையும் கொண்டுள்ள இது, முந்தைய ஆப்பிள் கடிகாரத்தை விட விலை குறைவாகவும் இருக்குமாம்.